Thursday, 28 June 2018

# "அணைகள் பாதுகாப்பு மசோதா 2018"
=================================
இந்தியா முழுவதுமுள்ள சுமார் 5200 அணைகளை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வகையில், அணைப் பாதுகாப்பு மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு ஜூன் 13-ம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

பயன்கள்
- நாட்டின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், ஒரே சீரான அணை பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்க இந்த மசோதா உதவும். அணைகளிலிருந்து பயன்களை பெறும்வகையில், அவற்றின் பாதுகாப்பை இது உறுதி செய்கிறது. இந்த மசோதா மனித உயிர்கள், கால்நடைகள், சொத்துக்கள் ஆகியவற்றை பாதுகாக்கவும் உதவும்.

"National Dam Safety Authority"
- தேசிய அணைகள் பாதுகாப்புக் குழுவை அமைப்பதற்கு இந்த மசோதா வகை செய்கிறது.
- இந்த ஆணையம் மாநில அணைப் பாதுகாப்பு அமைப்புகளுடன் தொடர்புகளை பராமரிக்கும். அணைகள் மீது உரிமை உடையவர்களுடன் தொடர்புகொண்டு அணைப் பாதுகாப்பு தொடர்பான தகவல் மற்றும் நடைமுறையை தரப்படுத்தும்.

"State Committee on Dam Safety" (மாநில அணை பாதுகாப்புக் குழு)

- மாநிலத்தில் உள்ள அனைத்து குறிப்பிட்ட அணைகளின் சரியான கண்காணிப்பு, ஆய்வு, நடைமுறை, பராமரிப்பு ஆகியவற்றை இந்தக் குழு உறுதிசெய்யும். பாதுகாப்பான செயல்பாட்டையும் அது உறுதிசெய்யும். ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில அணை பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்தவேண்டும் என்று இந்தச் சட்டம் வலியுறுத்துகிறது

# ஆதாரில் முக அடையாள முறை (Face Recognition Based aadhar) ஆகஸ்ட் 1 முதல் அமல்படுத்தப்படும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தெரிவித்துள்ளது

# சத்தீஸ்கர் மாநிலத்தில் விரிவாக்கத்துடன் மேம்படுத்தப்பட்ட 'பிலாய் இரும்பு ஆலையை' (Bhilai steel plant) நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணித்து வைத்துள்ளார்
- இந்த விரிவாக்கப்பட்ட ஆலையின் திறன் ஆண்டிற்கு 13 மில்லியன் டன்னிலிருந்து 21 மில்லியன் டன்னிற்கு உயர்த்தப்பட்டுள்ளது
- இது 1955ஆம் ஆண்டு அப்போதைய சோவியத் ஒன்றியத்தின் தொழில்நுட்ப உதவியுடன் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

# இந்தியாவின் முதல் 'கார்பன் இழை உற்பத்தி ஆலையை ரிலையன்ஸ் நிறுவனம்' (India’s first carbon fibre manufacturing unit) அமைக்க உள்ளது

# முன்பதிவு செய்யாத டிக்கெட்களை முன்பதிவு செய்ய "Utsonmobile" என்ற மொபைல் செயலியை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது
- இதனை மத்திய ரயில்வே தொழில்நுட்ப அமைப்பு(CRIS) வெளியிட்டுள்ளது

# "Solar Charkha Mission" மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்த்துறை அமைச்சகத்தால் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது
- இத்திட்டத்தின் மூலம் 50 திரள் மையங்கள் ஏற்டுத்தப்படும், ஒவ்வொரு திரள் மையங்களில் இருந்தும் 400 முதல் 2000 கைவினை கலைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்

# "Composite Water Management Index": கலப்பு நீர் மேலாண்மை திட்டத்தில், இந்தியாவிலேயே "குஜராத்" மாநிலம் முதலிடத்தில் உள்ளதாக NITI Aayog வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-  இதற்கு அடுத்த இடத்தில் ம.பி., ஆந்திரா, கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்கள் உள்ளன.
- வடகிழக்கு மாநிலங்களை பொறுத்தவரை திரிபுரா முதலிடத்தில் உள்ளது.
- ஆனால் பீஹார், ஜார்க்கண்ட், அரியானா, உ.பி., மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் நீர் மேலாண்மையில் மோசமாக உள்ளது.

# "தேசிய பழங்குடியினர் அருங்காட்சியகம்" (National Tribal Museum) "டெல்லியில்" அமைக்க உள்ளதாக மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
- இந்த அருங்காட்சியகத்துடன் தேசிய பழங்குடியினர் ஆராய்ச்சி மையமும் (National Tribal Research Institute) அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

# தேசிய ஓய்வூதிய திட்டத்தை(NPS) நடைமுறைப்படுத்துவது தொடர்பான மாநாடு டெல்லியில் நடைபெற்று முடிந்துள்ளது

# புதிய 'தொலத்தொடர்பு கொள்கை 2018' (Telecom Policy 2018) ஜீலை மாதத்தில் வெளியிடப்படும் என மத்திய தொலத்தொடர்பு அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்
- புதிய தொலைத் தொடர்பு வரைவு கௌள்கை 2018 ஆனது மே மாதம் 1ம் தேதி வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது

# நிணநீர் யானைக்கால் நோயை ஒழிப்பது தொடர்பான உலகளாவிய கூட்டமைப்பின்(GAELF) மாநாடு டெல்லியில் நடைபெற்று முடிந்துள்ளது
- GAELF மாநாடு இந்தியாவில் நடத்தப்படுவது இது இரண்டாவது முறையாகும், முதல் முறை 2002ம் ஆண்டு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது
- GAELF- Global Alliance to Eliminate Lymphatic Filariasis

# ஒடிசா மாநிலம் ஜார்சுகுடா(Jharsuguda) நகரில் கட்டப்பட்டு வரும் விமான நிலையத்துக்கு சுதந்திர போராட்ட வீரர் "வீர சுரேந்திர சாய்"ன் (Veer Surendra Sai) பெயரை சூட்ட வேண்டும் என அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளார்

# 106வது இந்திய அறிவியல் மாநாடு (ISC) பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள "Lovely Professional University"ல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள

No comments:

Post a Comment